தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், சென்னையை நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருகின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நாளை முதல் முழு அளவில் இவை இயங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர்களில் இருந்து புறப்பட்டு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் செங்கல்பட்டு பரனூர் சுங்கக் சாவடியில் அதிகாலை முதல் கடும் வாகன நெரிசல் காணப்பட்டது.
அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.