சென்னை அயனாவரத்தில் ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவத்தின்போது இருந்த காவலர் உட்பட 4 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல ரவுடி சங்கர் கடந்த 21-ம் தேதி போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். கஞ்சா பறிமுதல் நடவடிக்கைக்கு சென்ற போது காவலர் முபாரக்கை தாக்கி விட்டு தப்ப முayaயன்றதால் ஆய்வாளர் நடராஜால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் ஆய்வாளர் தவிர்த்து என்கவுன்டர் சம்பவத்தின்போது இருந்த, தலைமை காவலர்கள் ஜெயபிரகாஷ், வடிவேலு, முதல் நிலை காவலர் முபாரக் மற்றும் காவலர் காமேஷ்பாபு ஆகியோரை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு அயல் பணியாக இடமாற்றம் செய்து கீழ்பாக்கம் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.