சென்னையை அடுத்த திருமழிசை அருகே புதிதாக பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தபுள்ளிகளை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கோரியுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆயிரகணக்கான பேருந்துகளால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை குறைக்கும் நோக்கில், சேலம், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கும், பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களுக்கும் செல்லும் பேருந்துகளுக்கு குத்தாம்பாக்கம் கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 25 ஏக்கரில் அமையவுள்ள பேருந்து நிலைய வடிவமைப்பு குறித்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அண்மையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து பணிக்காக செப்டம்பர் 21க்குள் ஒப்பந்தபுள்ளிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கோரியுள்ளது.