ஜப்பான் நாட்டில் உள்ளது போன்று சென்னை காமராஜர் சாலையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காந்தி சிலை அருகே தூரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் சிக்னல் தெரியும் வகையில் கம்பம் முழுவதும் எல்.இ.டி.விளக்குகள் ஒளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பச்சை நிற சிக்னல் விழுந்தால் GO என்றும், ஆரஞ்சு நிற சிக்னல் விழுந்தால் LISTEN என்றும், சிவப்பு நிற சிக்னல் விழுந்தால் STOP என்று மின்னணு அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டு அவையும் சின்கலுக்கேற்றவாறு ஒளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சின்கல் கம்பம் சோதனை முயற்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும், மக்களிடையே வரவேற்பை பொருத்து விரிவுபடுத்தப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.