நாட்டின் 74வது சுதந்திர தின விழா நாளை மறு தினம் கொண்டாடப்படும் நிலையில், சென்னை கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தனிமனித இடைவெளியுடன் சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் வரும் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் சென்னை கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் துறையின் ஆயுதப்படை பிரிவு, மகளிர் காவல் பிரிவு, குதிரைப் படை உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடத்தி ஒத்திகை பார்க்கப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிந்து ஒத்திகையில் பங்கேற்றனர். இதனால் காமராஜர் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கபபடாமல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.