சென்னையில் மூன்றாவது கட்டமாக அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் 15 கண்டெய்னர்களில் ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டதன் மூலம், முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மணலி கிடங்கில் இருந்த 697 டன் அம்மோனியம் நைட்ரேட்டை, மின்னணு ஏலம் நடத்தி ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சுங்கத்துறை விநியோகித்தது. சால்வோ வெடிப்பொருள் மற்றும் கெமிக்கல்ஸ் எனும் பெயரில், ஐதராபாத் திரிமுல்கேரியில் செயல்படும் அந்த நிறுவனத்திற்கு இரண்டு கட்டங்களாக ஏற்கனவே டிரக்குகள் மூலம் 22 கண்டெய்னர்களில் 397 டன் அம்மோனியம் நைட்ரேட் கொண்டு செல்லப்பட்டது.
மீதமுள்ள 300 டன் அம்மோனியம் நைட்ரேட் 15 கண்டெய்னர்களில் இன்று கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய அம்மோனியம் நைட்ரேட் முழுமையாக அகற்றப்பட்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.