சென்னையில் ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் லாட்டரி விற்பனை நடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
தங்கம் லாட்டரி என்ற பெயரில் போடோலாந்து அரசு பரிசு தொகை தருவதாக சென்னையின் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப் படுவதாகவும் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு தாம்பரம் பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்களே ஆன்லைனிலும் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு ராசி ரங்கா, முருகனாந்தன், சுந்தரபாண்டி, பிரகாஷ், ஜெயக்குமார், செல்வராஜ் என 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.