தொடர் மழையால் திருமழிசை மொத்த காய்கறி சந்தையில் விற்பனை ஆகாமல் சுமார் 2 ஆயிரத்து 500 டன் காய்கறிகள் லாரிகளிலேயே
தேக்கம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இங்கு, நாளொன்றுக்கு 400 முதல் 500 லாரிகள் மூலமாக சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
நேற்று மாலை முதல் தொடர்ந்து திருமழிசை பகுதியில் மழை பெய்து வருவதால் காய்கறிகளை லாரி களில் இருந்து இறக்கி சேமித்து வைத்து விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.
இதை மீறி, தற் காலிக கடைகளில் இறக்கி வைக்கப்படும் காய்கறி களும், தேங்கி நிற்கும் மழை நீரில் அழுகி விடுவதாக வேதனை தெரி வித்துள்ள திருமழிசை மொத்த வியாபாரிகள், சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கும் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.