சென்னை புறநகரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருமழிசை மொத்த காய்கறி சந்தை வெள்ளக்காடாகியுது. சென்னையில் நேற்று மாலை கனமழை வெளுத்து வாங்கியது.
காலை நேரத்திலும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருமழிசையில் செயல்பட்டு வரும் தற்காலிக மொத்த காய்கறி சந்தையில் மழைநீர் தேங்கி சேரும், சகதியுமாக இருப்பதால் வாகனப் போக்குவரத்து மற்றும் காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகளை தேக்கி வைக்க போதிய இடம் இல்லாததால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டன் கணக்கிலான காய்கறிகள் அழுகி வீணாகின. மழைநீர் தேங்கி மண் சாலையில் வாகனங்கள் சிக்கி கொள்வதால், வியாபாரிகளும் சந்தைக்கு வருவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என கூறப்படுகின்றது.