சென்னை - அண்ணா பல்கலைக்கழகத்தின்மாண்பை சீர்குலைக்கும் வகையில், சமூக வலைதளங்களில் தேவை இல்லாத கருத்துக்களை பேராசிரியர்களோ அல்லது ஊழியர்களோ வெளியிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று அப் பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு துவங்கி நடந்து வரும் சூழலில், மாநிலம் முழுவதும் 89 தரமற்ற பொறியியல் கல்லூரிகள் இயங்குவதாக வும், அக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என அண்ணா பல்கலைக் கழகம் பட்டியல் வெளியிட்டு உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கருணாமூர்த்தி, அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எழுதி உள்ள ஒரு கடிதத்தில், சமூக வலை தளங்களிலோ அல்லது பொது வெளியிலோ பல்கலைக்கழகத்தின் பெருமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பேராசிரி யர் கள், ஊழியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்றும் பதிவாளர் கருணாமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.