கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாததால் சென்னையிலுள்ள பெரிய வணிக நிறுவனங்களை மறு உத்தரவு வரும் வரை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள் அமலானதை அடுத்து பெரிய வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தாலும், முகக்கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட விதிகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டது. அவ்வாறு பின்பற்றவில்லையெனில் கடைகள் 14 நாட்களுக்கு மூடி சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில் வணிக நிறுவனங்களில் விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என தொடர்ந்து புகார் எழுந்ததால், வணிக வளாகங்கள் அனைத்தையும் மறு உத்தரவு வரும் வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பெரிய வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.