சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோரின் எண்ணிக்கை 71,949ஆக அதிகரித்துள்ளது.
15 மண்டலங்களிலும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 88,377ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,952 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 1,475 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா பாதித்தோரில் 58 புள்ளி 22 சதவீதம் பேர் ஆண்கள், 41 புள்ளி 78 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,947 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதற்கடுத்து அதிகபட்சமாக அண்ணாநகரில் 1,628 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவிலிருந்து குணமானோரின் விகிதம் 81 சதவீதமாகவும், பலியானோர் விகிதம் 1 புள்ளி 67 சதவீதமாகவும் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 17 சதவீதமாக உள்ளது.