சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 84 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில், சென்னை முழுவதும் 84,598 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 68,193 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
14,997 பேர் மருத்துவமனைகளில் சிகிச்ச பெற்று வரும் நிலையில், இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 1407ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 206 பேரும், தண்டையார்ப்பேட்டை மண்டலத்தில் 191 பேரும் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக கொரோனா பாதித்தவர்களில் 58.34 சதவீதம் பேர் ஆண்களும், 41.66 சதவீதம் பேர் பெண்களும் ஆவர்.