சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 36ஆக உயர்ந்துள்ளது.
15 மண்டலங்களிலும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 80,961ஆக அதிகரித்துள்ளது. இதில் கொரோனாவுக்கு 15 ஆயிரத்து 606 பேர் சிகிச்சை பெறும் நிலையில், ஆயிரத்து 318 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 2 ஆயிரத்து 219 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதித்தோரில் 57 புள்ளி 89 சதவீதம் பேர் ஆண்கள், 42 புள்ளி 11 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். கொரோனாவால் அதிகபட்சமாக 30 முதல் 39 வயதுக்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது மொத்த பாதிப்பில் அந்த வயதுக்குட்பட்டோருக்கு 18 புள்ளி 26 சதவீதம் தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 10 ஆயிரத்து 660 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.