சென்னை கொத்தவால்சாவடி சந்தையில் கூட்ட நெரிசலை குறைக்க இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொத்தவால்சாவடி மொத்த வியாபார கடைகளுக்கு சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வதால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக கொத்தவால்சாவடி சந்தையை இணைக்கும் பிற சாலைகள், தெருக்கள் அனைத்தும் இன்று முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
கொத்தவால்சாவடிக்கு உள்ளே வந்து செல்லும் சரக்கு வாகனங்கள், வியாபாரிகளின் வாகனங்கள் அண்ணா பிள்ளை தெரு, பிரகாசம் தெரு, பி.வி. ஐயர் தெரு வழியாக செல்லலாம். சந்தையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் தங்கசாலை, தாதா முத்தியப்பன் வழியாக வெளியேறலாம்.
போக்குவரத்தை கண்காணிக்க கூடுதலாக போக்குவரத்து போலீசார், ஆயுதப்படை காவலர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.