சென்னையில் மருத்துவ கழிவுகளை அகற்ற நடமாடும் எரியூட்டு வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் மற்றும் மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தும் மருத்துவ கழிவுகள் நாளுக்குள் நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் சேரும் மருத்துவ கழிவுகளை அகற்றும் பணியை எளிதாக்க நடமாடும் எரியூட்டு வாகனம் வாங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.