சென்னையில் திங்கள் காலை நிலவரப்படி தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 469 ஆக உள்ளது. அதிக அளவாகக் கோடம்பாக்கம் மண்டலத்தில் இரண்டாயிரத்து 497 பேர் தற்போதைய கொரோனா நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்ணாநகர் மண்டலத்தில் ஆயிரத்து 849 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 651 பேரும் தற்போதைய நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார் பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 331 பேரும், அடையாறு மண்டலத்தில் ஆயிரத்து 323 பேரும் தற்போதைய நோயாளிகளாக உள்ளனர்.
ராயபுரம் மண்டலத்தில் ஆயிரத்து 290 பேரும், திருவிக நகர் மண்டலத்தில் ஆயிரத்து 69 பேரும் தற்போதைய நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 979 பேரும், அம்பத்தூர் மண்டலத்தில் 977 பேரும் தற்போதைய நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.