கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததாக வெளியான தகவலை மியாட் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
அமைச்சர் அன்பழகனின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள மியாட் மருத்துவமனை நிர்வாகம், அமைச்சர் அன்பழகனின் உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளது.
அமைச்சர் அன்பழகன் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதாக வெளியான தகவல் தவறானது என்றும், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் செல்போன் மூலமாக அமைச்சர் தொடர்ந்து துறை ரீதியிலான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.