சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 பேர் உயிரிழந்ததை அடுத்து, சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருகம்பாக்கம் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு காவலரின் தந்தையும் உயிரிழந்தார். அதே போல் அமைந்தகரை, அடையாறு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர்.
நேற்றுவரை சென்னையில் கொரோனா பாதிப்புக்கு 996 பேர் பலியான நிலையில், இன்று மேலும் 25 பேர் பலியானதால் சென்னையில் கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.