சென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சையின் ஒரு பகுதியாக சித்த மருத்துவ முறையையும் முயற்சித்துப் பார்க்க உள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அங்கு ஆய்வு மேற்கொண்ட பிறகு அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனும் ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் எவ்வித கட்டுபாடுகள் இன்றி நோயாளிகளை அனுமதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், கொரோனா பாதித்த எம்எல்ஏக்கள் நலமாக உள்ளனர் என தெரிவித்தார்.
ஐசிஎம்ஆரிடம் அனுமதி பெற்று சென்னை, மதுரை, திருநெல்வேலியில் பிளாஸ்மா சிகிச்சை மையத்தின் மூலமாக பிளாஸ்மாவை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.