சென்னையில் கொரோனா பரவலால் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 155ஆக அதிகரித்துள்ளது.
மாநகராட்சி நேற்று வெளியிட்ட புள்ளி விவரங்களில் அந்த எண்ணிக்கை 143ஆக இருந்தநிலையில், இன்றைய புள்ளி விவரங்களில் அந்த எண்ணிக்கை மேலும் 12 அதிகரித்துள்ளது.
அதன்படி, மொத்தமுள்ள 9 மண்டலங்களில் உள்ள 155 தெருக்கள், பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக தண்டையார் பேட்டை மண்டலத்தில் 50 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கடுத்து அதிகபட்சமாக அண்ணா நகரில் 44 தெருக்களும், அம்பத்தூர் மற்றும் கோடம்பாக்கத்தில் தலா 13 தெருக்களும், வளசரவாக்கம் மற்றும் அடையாரில் தலா 10 தெருக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.