சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி, அதிவேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 2 ஆயிரத்து 182 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆன து. அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டில் புதிதாக 226 பேரும், திருவள்ளூரில் 147 பேரும், காஞ்சி புரத்தில் 86 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மதுரையில் புதிதாக 297 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, அங்கு கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்குகிறது. சேலத்தில் 178, ராம நாதபுரத்தில் 111, வேலூரில் 77, விருதுநகரில் 45 மற்றும் திருவண்ணாமலையில் 42 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனாவுக்கு உயிரி ழந்த ஆயிரத்து 264 பேரில், 929 பேர், சென்னையை ச் சேர்ந்தவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.