சென்னையில் ஒரே நாளில் 584 இடங்களில் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், நெருக்கமான வீடுகள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லையென களப்பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் பரிசோதனை முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. இதன்படி கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகப்பட்சமாக 64 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
எம்.ஜி.ஆர் நகர், நெசப்பாக்கம் பகுதியில் வீடு, வீடாகச் சென்று அங்கிருப்போரை களப்பணியாளர்கள் அழைத்து வந்து அறிகுறிகள் இருக்கிறதா என பரிசோதித்தனர். அதில் கொரோனா பாதித்து மருத்துவமனையில் தூய்மை பணியாளர் அனுமதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் தனிமைபடுத்தப்பட்ட மனைவியை நீண்ட போராட்டத்துக்கு பிறகு அழைத்து வந்து மாத்திரை கொடுத்து அனுப்பினர். அண்ணா நகர் மண்டலத்தில் 63 முகாம்கள், ராயபுரம் மண்டலத்தில் 56 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.