தமிழகத்தில் 75 சதவீதம் பேர் மின் கட்டணம் செலுத்திவிட்ட நிலையில், ஜூலை 31 வரை கால அவகாசம் கோருவது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணத்துக்கான காலக் கெடுவை ஜூலை 31 வரை நீட்டிக்க கோரிய வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பினர்.
இதுவரை மின் கட்டணம் செலுத்தப்பட்ட விவரம் மற்றும் இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர். மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை துண்டிக்க கூடாது என இந்த வழக்கில் நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.