சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையின் 15 மண்டலங்களிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 51 ஆயிரத்து 699ஆக அதிகரித்துள்ளது.
இதில் ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 7,455 பேருக்கு கொரோனா இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கடுத்து அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் 6221 பேருக்கும், தேனாம்பேட்டையில் 5,758 பேருக்கும், அண்ணாநகரில் 5,506 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 5,432 பேருக்கும், திருவிக நகரில் 4,387 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
அடையாறில் 3202ஆக அதிகரித்த நிலையில், வளசரவாக்கத்தில் 2310ஆகவும், அம்பத்தூரில் 2120ஆகவும், திருவொற்றியூரில் 2 ஆயிரத்து 19ஆகவும், மாதவரத்தில் 1655ஆகவும், ஆலந்தூரில் 1300ஆகவும், சோழிங்கநல்லூரில் 1101ஆகவும் அதிகரித்துள்ளது. 15 மண்டலங்களிலும் சிகிச்சையில் 31 ஆயிரத்து 45 பேர் குணமான நிலையில், 776 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.