முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வீடு என்ற அடிப்படையிலேயே கனிமொழி இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும், போலீஸ் பாதுகாப்பை நீட்டிப்பது குறித்து கோரிக்கை ஏதும் வைக்காததால் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியிலுள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனிமொழி வீட்டிலிருந்து போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு காவலர் பற்றாக்குறை காரணம் எனக் கூறப்பட்டதற்கு மறுப்பு தெரிவித்தார்.