நாட்டிலேயே சென்னை மாநகரில் தான் அதிகபட்ச சைபர் தாக்குதல்கள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சைபர் பாதுகாப்பு நிறுவனமான கே 7 கம்ப்யூட்டிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-20ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில், அதிகபட்சமாக சென்னையில் 42 சதவீதம் அளவிற்கும், பாட்னாவில் 38 சதவீதம் அளவிற்கும் சைபர் தாக்குதல்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காலாவதியான மென்பொருள் மற்றும் இயக்க முறைமைகளை தொடர்ந்து பயன்படுத்துவதே இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டு உள்ளது. கர்வ்பால், ரிமோட் கோட் எக்ஸிகியூஷன், கொரோனா வைரஸ் அடிப்படையில் ஃபிஷிங் மற்றும் டாஸ் (DOS) போன்ற தாக்குதல்கள் மட்டுமின்றி, சிக்கலான யூ.எஸ்.பி தாக்குதல்களும் அதிக அளவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.