சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களிடம் தலா 500 ரூபாய் வீதம் அபராதம் வசூலித்த போலீசார், 7,524 பேர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அதிக கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 12 நாட்கள் அமல் படுத்தப்பட்டு உள்ளது. தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றியவர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்த போலீசார், 3- வது நாளில் மட்டும் 5 ஆயிரத்து 378 வழக்குகள் பதிவு செய்தனர்.
கடந்த 3 நாட்களிலும் மொத்தம் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ள மாநகர காவல்துறை, இவைகள் அனைத்தும், ஊரடங்கு முடிந்த பிறகே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளது.