இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையிலிருந்து ஏராளமானோர் சொந்த ஊர் செல்வதற்காக குவிந்துள்ளதால், வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
ஏராளமானோர் உரிய அனுமதியின்றி ஊர்களுக்கு செல்வதாக புகார் எழுந்த நிலையில், வண்டலூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈ -பாஸ் வைத்திருப்பார்கள் மட்டும் மேற்கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், மற்றவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் வண்டலூர் பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.