சென்னை அடையாறு மண்டலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ராயபேட்டை மண்டலத்தில் அத்தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 5,626ஆக அதிகரித்துள்ளது.
தண்டையார் பேட்டையில் 4,549ஆகவும், தேனாம்பேட்டையில் 4,334ஆகவும், கோடம்பாக்கத்தில் 3,801ஆகவும் உயர்ந்துள்ளது.
அண்ணாநகரில் 3,636ஆகவும், திருவிக நகரில் 3,160ஆகவும், அடையாறில் 2,069ஆகவும் அதிகரித்த நிலையில், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 497ஆகவும், திருவொற்றியூரில் ஆயிரத்து 324ஆகவும், அம்பத்தூரில் ஆயிரத்து 243ஆகவும் உயர்ந்துள்ளது.
15 மண்டலங்களிலும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 556ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 19 ஆயிரத்து 27 பேர் குணமான நிலையில், 461 பேர் பலியாகியுள்ளனர். இதுதவிர்த்து 16 ஆயிரத்து 67 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.