சென்னையின் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 29 பேர் உயிரிழந்தனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரானாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஆண்கள் 10 பேர், பெண்கள் 2 பேர் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் உயிரிழந்தனர்.
வடபழனி தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வந்த ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த 72 வயது முதியவர் உயிரிழந்தார்.
ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வந்த தியாகராய நகரைச் சேர்ந்த 53 வயது ஆண் உயிரிழந்தார்.