சென்னையில் கடந்த 2 மாதங்களில் 155 செவிலியர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வார்டுகளில் பணிபுரிந்தவர்கள் ஆவர்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் கொரோனா பாதித்து வருகிறது. அந்த வகையில் சென்னை முழுவதும் 155 செவிலியர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 50 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 45 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 30 செவிலியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்ட செவிலியர்களில் 135 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 20 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.