சென்னை அயனாவரத்தில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில், போதிய படுக்கை வசதிகள் இல்லை என்று கூறப்படுவதால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மருத்துவர்கள் 6 பேர் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் 6 பேருக்கு இன்று காலை தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள், அங்கு போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் அயனாவரம் ஈஎஸ் ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கும் போதுமான படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்சிலேயே காத்திருந்தவர்கள், 4 மணி நேரம் கடந்ததால் ஆம்புலன்சிலிருந்து இறங்கி பார்க்கிங் பகுதியில் காத்திருந்தனர்.
அயனாவரம் மருத்துவமனையிலும் இடம் கிடைக்காத நிலையில், அவர்கள் பணியாற்றும் எழும்பூர் தாய், சேய் நல மருத்துவமனைக்கே அழைத்து செல்லப்பட்டு அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.