சென்னையில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 1243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 545 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அவர்களில் இதுவரை 11 ஆயிரத்து 730 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 158 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து விட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 90 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1500ஐ நெருங்கியுள்ளது.
காஞ்சிபுரத்தில் 32 பேருக்கும், திருவண்ணாமலையில் 19 பேருக்கும், மதுரை, வேலூரில் தலா 16 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மட்டும் கொரோனா நோயாளிகள் இல்லாமல் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.