சென்னையில், 5 ஆயிரம் நோயாளிகளை கையாளும் அளவிற்கு வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மட்டுமே கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றும், கொரோனாவை மையமாக வைத்து வதந்தி பரப்பினால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.