தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்ட நிலையில், சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 149 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.
செங்கல்பட்டில் புதிதாக 134 பேருக்கும், திருவள்ளூரில் 57 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆக, காஞ்சிபுரத்தில் புதிதாக மேலும் 18 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வேலூர் - 33, தூத்துக்குடி - 26, கள்ளக்குறிச்சி - 20 என கொரோனா பாதிப்பு புதிதாக பதிவாகி உள்ளது.
கொரோனாவுக்கு இரை ஆன 286 பேரில், 224 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் 11 ஆயிரத்து 800 க்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.