தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கோவிட் -19 வைரஸ் தற்போது அதிகம் வீரியம் உடைய கிளேட் A13i ஆக உருமாறி வருவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியடைய செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குழந்தைகள், சிறுவர், சிறுமியர் உட்பட பல தரப்பினருக்கும் கொரோனா பரவி வருவதை அறிய முடிகிற சூழலில், பொதுத்தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவ வழிவகுத்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான சூழல் உருவாகி இயல்பு நிலை திரும்பிய பின்னர், பொதுத்தேர்வை நடத்திக்கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.