மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்ல இருந்த பெண் ஒருவரிடம் இருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த பயணிகளின் உடமைகளை, விமான நிலைய அதிகாரிகள், ஸ்கேனிங் மூலம் சோதனை செய்தனர். அப்போது, 41 வயது பெண் ஒருவர் வைத்திருந்த பெட்டியில், 2 துப்பாக்கி குண்டுகளும், பயன்படுத்தப்பட்ட 6 குண்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணை யில், இவரது பெயர் புகாடியா லெஷ்மி லாவண்யா என்றும், ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
வழக்கு பதிவு செய்துள்ள பெருங்குடி காவல்துறை யினர், இந்த பெண்ணிடம் துப்பாக்கி குண்டுகள் எவ்வாறு வந்தது ? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.