சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்து காணொலி காட்சி மூலம் நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.
ஊரடங்கிற்கு இடையே கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நீதிபதிகள், தங்கள் வீடுகளில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வழக்குகளை விசாரித்து வந்தனர். இந்த நிலையில் 5வது கட்டமாக நீட்டிக்கப்பட்டு உள்ள ஊரடங்கில் நீதிமன்ற அறைகளில் இருந்து விசாரணை நடத்த தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வழக்கு விசாரணைகளை தொடங்கி உள்ளனர். இதன்பொருட்டு நீதிமன்ற வளாகத்துக்குள் நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள கீழமை நீதிமன்றங்களிலும், நீதிபதிகள் தங்கள் அறைகளில் இருந்தபடியே காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.