அரசு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள், "ஸ்கைப்" தொழில் நுட்பம் மூலம் மருத்துவர்களுடன் உரையாடி, ஆலோசனை பெறும் புதிய வசதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுபோன்ற வசதி, தமிழகத்தில், 25 அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் துவக்கப்பட்டு உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்தார்.
இந்து புதிய சேவையின் மூலம் மருத்துவர்களிடம் சந்தேகங்களை கேட்டறியும் கொரோனா நோயாளிகள், என்ன செய்ய வேண்டும்? - என்னென்ன செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதனிடையே, சென்னை - ஓமந் தூரார் அரசு பல்நோக்கு மருத்துவ மனை கொரோனா பிரிவில் அனுமதிக்கப் பட்டு இருந்த 2 ஆயிரத்து 200 பேரில், ஆயிரத்து197 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.