கொரோனா சோதனை முடிவு வெளியாவதற்கு முன், விமானப் பயணிகளை தங்க வைப்பதற்கு ஓட்டல் ஊழியர்கள் தயக்கம் வெளியிட்டுள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து விமானங்களில் வந்த பயணிகள், 14நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். வசதி படைத்த சிலர் அரசின் முகாம்களில் தங்க விரும்பாமல் சொந்த செலவில் அருகில் உள்ள தனியார் சொகுசு ஒட்டல்களில் தங்கினர்.
இந்நிலையில் பயணி ஒருவருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. இதனை அடுத்து அவர் தங்கி இருக்கும் ஓட்டலின் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனால், வெளிமாநிலங்களில் இருந்து விமானத்தில் வருபவர்களை உடனடியாக ஓட்டல்களில் தங்க அனுமதிக்க கூடாது என்றும் அவர்களுக்கு கொரோனா சோதனை முடிவு தெரிந்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று ஓட்டல் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.