சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 420லிருந்து 305ஆக குறைந்துள்ளது.
சென்னையில் ஒரு தெருவில் 5 பேருக்கும் குறைவானவர்கள் பாதிக்கப்படடிருந்தால், அந்த தெரு முழுவதும் அல்லாமல், பாதிக்கப்பட்டோரின் வீடுகள் மட்டும் தனிமைபடுத்தப்படுகின்றன.
அதேநேரத்தில், 5 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டால் அப்பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் 420ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்னிக்கை 305ஆக குறைந்துள்ளது.
மேலும்,14 நாட்களாக நோய்த்தொற்று பாதிப்பு இல்லாத 846 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 90 பகுதிகளும் திரு.வி.க நகர் மண்டலத்தில் 41 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.