டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா என டாஸ்மாக் நிறுவனம் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மதுபானங்கள் தரம் சரிபார்த்து கொள்முதல் செய்யப்படுகிறதா? என்றும் அதற்கு ஆதாரம் உள்ளதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசு நிர்ணயித்த எம்.ஆர்.பி. விலையில் தான் விற்கப்படுகிறதா? ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா? என்றும் அதிக விலைக்கு விற்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஜூன் 25-ல் டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.