கொரோனா தொற்று அதிகமுள்ள ராயபுரம் மண்டலத்தில் ஆட்டோக்கள் மூலம் வீடு வீடாக கபசுர குடிநீர், மூலிகை தேநீர் விநியோகிக்கும் பணிகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை கொரோனா தடுப்பு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வேப்பிலையை கொடி போல் அசைத்து கபசுர குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார், ஆட்டோ ஓட்டி களப்பணியாளர்களை உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.