மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் சென்னையில் கருவாடு விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை தங்கசாலை பகுதியில் அமைந்துள்ள 100க்கும் மேற்பட்ட கருவாட்டுக் கடைகள் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி அறிவுறுத்தலின்படி நாளொன்றுக்கு 4 கடைகள் வீதம் சுழற்சி முறையில் கடைகள் செயல்படுகின்றன. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் என்பதாலும் கருவாடு உற்பத்தி இல்லாததாலும், கருவாடு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான நெத்திலிக் கருவாடு 1200 ரூபாய்க்கும், கிலோ 300 ரூபாய்க்கு விற்பனையான வாளை கருவாடு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வஞ்சிரம் கருவாடு 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.