திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டையில் ஏழை எளியோர் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 400 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்களை வழங்கினார்.
திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஏழை எளியோருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் காய்கறி ஆகியன இவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை சைதாப்பேட்டையில் செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் 300 பேர், கோவில் அர்ச்சகர்கள் 75 பேர், துப்புரவுப் பணியாளர்கள் 25 பேர் என சுமார் 400 பேருக்குத் தலா 10 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள், ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன நலத்திட்ட உதவிகளை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.