சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 634லிருந்து 594ஆக குறைந்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு தெருவில் 5 பேருக்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், மொத்த தெருவும் அல்லாமல் பாதிக்கப்பட்டோரின் வீடு மட்டும் தனிமைபடுத்தப்படுகிறது. 5 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டால் அந்த தெரு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஒரே நாளில் 40 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து விடுவிக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் 634 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை, 594ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 131 பகுதிகளும், திரு.விக நகர் மண்டலத்தில் 98 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.