சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு செய்யச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்பதிவு கவுன்டர் திறப்பதாகக் கூறிய நிலையில், முன்பதிவு கவுன்டருக்குப் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
சென்னை - டெல்லி ராஜதானி சிறப்பு ரயில், ஜூன் முதல் இயக்கப்பட உள்ள 200 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் நேற்றே தொடங்கிவிட்டது.முன்பதிவுக்காகச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குறைந்தது 2 கவுன்டர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில் பயணச்சீட்டு எடுக்க மட்டுமே முடியும் என்றும், ரத்து செய்தல், பணம் திரும்பப் பெறுதல் ஆகியவை கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்தில் உள்ள முன்பதிவு நிலையத்துக்குப் பொதுமக்கள் வந்தனர்.
பயணச்சீட்டுகள் அனைத்தும் இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாகக் கூறி எவரையும் கவுன்டருக்கே அனுமதிக்கவில்லை. இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.