சென்னையில் 10 லட்சம் பேரில் சராசரியாக 12 ஆயிரத்த்திற்கு மேற்பட்டோர்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் பரிசோதனைகளை அதிகப்படுத்தியன் காரணமாகவே பாதிப்புகள் அதிகளவில் வெளியே தெரியவந்திருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்த சில புள்ளி விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், மொத்தமாக இந்தியாவில் 10 லட்சம் பேரில் 1821 பேருக்கும், தமிழகத்தில் 4,070 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் மட்டும் 10 லட்சம் பேரில், சராசரியாக 12 ஆயிரத்து 673 பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. சென்னைக்கு அடுத்தப்படியாக, தேனியில் 10 லட்சம் பேரில் 7,145 பேருக்கும், பெரம்பலூரில் 5437 பேருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.