சென்னை ராயபுரம் மண்டலம் காக்காதோப்பில் கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் மீறியதே ஒரே தெருவில் 51 பேருக்குக் கொரோனா பரவக் காரணம் எனக் கொரோனா தடுப்புச் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காக்காத்தோப்பு பி.ஆர்.தோட்டம் மெயின் தெருவில் 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வது, தெருவில் கூடி நின்று பேசுவது, தடையை மீறி வேறிடத்தில் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வருவது என இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஒரு சிலருக்குத் தொற்றிய கொரோனா 51 பேர் வரை பரவியுள்ளது. குறுகிய தெரு, அதிக மக்கள் நெருக்கம் கொண்ட பகுதியாக இருப்பதால் தெரு முழுவதும் பரவியதாகக் கொரோனா தடுப்புச் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.